ஹனோய்:வியட்நாமில் பெய்த தொடர் மழையால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடும் வெள்ளப் பெருக்கால், ஒரு லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு இதுவரை 62 பேர் பலியாகி விட்டனர். வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குவாங் பிங் மாகாணத்தில் மட்டும் 42 பேர் இறந்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன 17 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் அந்நாட்டு அரசு முடுக்கி விட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவதற்கு அந்நாட்டு அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. வெள்ளத்தால் 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
.gif)
.gif)
0 Responses So Far:
Post a Comment