கையெழுத்துப் போராட்டம்! 0

TamilN Networks | Tuesday, October 05, 2010 |

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி பொது மக்களிடம் கையெழுத்தை பெறும் செயற் திட்டம் இன்று ஆரம்பமாகியது.

கொழும்பு புறக்கோட்டை இரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான கையெழுத்து வேட்டையை ஜனநாயகத்திற்க்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்ததது.

இந்நிகழ்வில் அனோமா பொன்சேகா, ஜே.வி.பி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜெயசூரிய ஆகியோர் உட்பட பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

கையெழுத்துப் போராட்டத்தை முதலில் கையெழுத்திட்டு பொன்சேகாவின் மனைவி அனோமா ஆரம்பித்து வைத்தார். கையெழுத்திடுவதற்காக ஏராளமான மக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses So Far: