பெஷாவர், பாகிஸ்தானில் ஆப் கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வர்கிஸ்தான் மலைப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று மிராஸி புறநகர் பகுதியில் 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அவை அங்குள்ள மசூதி அருகே இருந்த ஒரு கட்டிடத்தை தாக்கியது. இதில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஜிகாத்-அல்- இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். கட்டிடத்தில் அனைவரும் கூடி சதி ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது ஏவுகணை தாக்குதலில் பலியாகி உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் மலைப்பகுதிக்குள் வந்து தங்கள் இயக்கத்தினரை அவ்வப்போது வந்து சந்தித்து செல்வது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டு சித்திக் உள்ளிட்ட 10 பேர் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் இருந்து புறப்பட்டு பாகிஸ்தான் மலைப்பகுதிக்கு வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் அல்- கொய்தாவை சேர்ந்தவர்கள். பின்னர் ஜிகாதிகள் மற்றும் தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் முகா மிட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஜெர்மனியின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சித்திக் கடந்த ஜூலை மாதம் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
அவரை பக்ராமில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டது. அவன் கூறிய தகவல் அடிப்படையில் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளுடன் மேலை நாடுகளை சேர்ந்த பயங்கரவாதிகளும் உள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
.gif)
.gif)
0 Responses So Far:
Post a Comment