நோபல் பரிசு சீனா ஆத்திரம்! 0

TamilN Networks | Saturday, October 09, 2010 |

இவ்வாண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு தனது பிரஜையான லி சியாவோ போ வுக்கு வழங்கப்பட்டதால் சீனா கடும் ஆத்திரமடைந்துள்ளது.

சியாவோ போ தற்போது சீனாவில் 11 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

சீனாவில் பல கட்சி ஜனநாயகம்,மனித உரிமைக்காக குரல் கொடுத்தமை என்பனதான் இவர் மீதான குற்றச்சாட்டுக்களாகும்.

சீனாவுக்கான மனித உரிமை சாசனம் ஒன்றையும் இவர் வெளியிட்டிருந்தார்.கடந்த டிசம்பர் மாதம் முதல் இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அதிருப்தியாளரான இவருக்கு வழங்கப்பட்டுள்ள சமாதான பரிசு தனது நாட்டின் மீதான ஒரு நிந்தனையாகும் என்று நோபல் பரிசு அதிகாரிகளை சீனா சாடியுள்ளது.

தேசிய நல்லிணக்கத்துக்காகவும்,சர்வதேச நட்புறவுக்காகவும் பாடுபடுகின்றவர்களுக்குத்தான் இந்தப் பரிசு வழங்கப்படவேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 Responses So Far: