டைட்டானிக் மூழ்கியது! 0

TamilN Networks | Sunday, October 03, 2010 |

லண்டன்:டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு மாலுமியே காரணம் என, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. டைட்டானிக் உல்லாச கப்பல் நடுக்கடலில் மூழ்கிய தினம், கடந்த நூற்றாண்டின் கறுப்பு தினமாக கருதப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படாமல், ரகசியம் காக்கப்படுகிறது.

இந்த நிலையில், மாலுமியின் தவறான முடிவுகளால் கப்பல் விபத்துக்குள்ளானதாக சமீபத்தில் வெளியான ""குட் இஸ் கோல்டு'' என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை டைட்டானிக் கப்பலில் துணை கேப்டனாக இருந்த சார்லஸ் லைட்டோலர் பேத்தி லூயிஸ் பேட்டன் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:பனிப்பாறை இருப்பது குறித்து இரண்டு கடல்மைல் தொலைவுக்கு முன்னதாகவே கப்பல் கேப்டன் வில்லியமுக்கு தெரிந்தது. உடனடியாக கப்பலை மாற்றுப்பாதையில் செலுத்த உத்தரவிட்டார்.

பனிப்பாறையில் மோதாமல் கப்பலை மாற்றுப் பாதையில் செலுத்துவதற்கு போதுமான கால அவகாசம் இருந்தது. ஆனால் கப்பலை செலுத்திய மாலுமி பதட்டமடைந்து, தவறான பாதையில் செலுத்தினார். இதை கப்பல் கேப்டனுக்கு கடைசி நேரத்தில் தெரிந்து, சரி செய்ய முயன்றார். ஆனால் அதற்குள் கப்பல் பனிப்பாறையில் மோதி விட்டது.

இரண்டாவது தவறு, பனிப்பாறையில் மோதிய இடத்தில் கப்பலில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுந்தது. கப்பலின் நீராவி இன்ஜினை மாலுமி, தொடர்ந்து இயங்க செய்திருந்தால், உள்ளே புகுந்த தண்ணீர் ஆவியாகி, கப்பல் மூழ்க அதிக நேரம் பிடித்திருக்கும். இதன் மூலம், மேலும் ஏராளமான பயணிகளை காப்பாற்றி இருக்க முடியும். இவ்வாறு அவர் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

0 Responses So Far: