இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானில் ஐரோப்பாவை சேர்ந்த சில தீவிரவாதிகள் இருப்பதாக கைது செய்யப்பட்ட தலிபான்கள் தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ் தானில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஜெர்மனியை சேர்ந்த தீவிரவாதிகள் பலியாகினர்.இதைத் தொடர்ந்து அல்கொய்தா மற்றும் தலிபான்களுடன் ஜெர்மனியை சேர்ந்த தீவிரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜெர்மனியை சேர்ந்த மொனிர் சவுகா என்பவரின் ஜிகாத் வீடியோ தீவிரவாதிகளின் வெப்சைட்டில் வெளியாகியுள்ளது. அதில் ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் மலைப்பகுதியில் ஜெர்மனியை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
15 முதல் 40 ஜெர்மனி தீவிரவாதிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெறும் காட்சி இடம் பெற்றுள்ளது. பயிற்சி பெற்றபின் இவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து பன்னாட்டு ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மற்றும் சிலர் ஐரோப்பிய நாடுகளுக்கு திரும்பி தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.gif)
.gif)
0 Responses So Far:
Post a Comment