இலங்கைத் தமிழர் பிரசாந்! 0

TamilN Networks | Friday, October 08, 2010 |

பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு தங்கப் பதக்கம் ஒன்றை பெற்றுக் கொடுத்திருக்கும் Gymnast அணியின் சாதனை வீரர்களில் ஒருவராக இலங்கைத் தமிழரான பிரசாந் செல்லத்துரை (வயது 24)அவரது பெயரை முத்திரை குத்தி உள்ளார்.

பொது நலவாய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி இந்தியாவின் தலைநகர் டில்லியில் இடம்பெற்று வருகின்றது. இதில் ஆஸ்திரேலியாவின் Gymnast team சார்பாக பிரசாந்தும் போட்டி இட்டார்.

Gymnast போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்குதான் முதலாமிடம் கிடைத்தது. Gymnast போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கப் பெற்றிருக்கும் முதலாவது சந்தர்ப்பமும் இதுவே ஆகும்.

பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் தங்கப் பதக்கத்தை Gymnast போட்டியில் பெறுகின்ற மூன்றாவது நாடு ஆஸ்திரேலியாவே ஆகும்.

கனடா நான்கு தடவைகளிலும், பிரித்தானியா இரு தடவைகளிலும் கடந்த காலங்களில் Gymnast போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தன. பிரசாந்தன் 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்.

இவரின் பெற்றோர் இலங்கைத் தமிழர்கள். ஆனால் 1983 ஆம் ஆண்டு இப்பெற்றோர் ஆஸ்திரேலியாவுக்கு வந்து குடியேறி விட்டார்கள். பிரசாந் சிட்னியில் வசிக்கின்றார்.

இவருக்கு இரு தங்கைமார் உள்ளார்கள். பிரசாந் Gymnast போட்டிகளில் கடந்த காலங்களிலும் உலகளாவிய ரீதியில் ஏராளமான சாதனைகளை நிலைநாட்டி உள்ளார்.

0 Responses So Far: