அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளம் யுவதி ஒருவரும்,அவரது ஒன்றரை வயது மகளும் கடந்த வாரம் அங்கு அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
கொலையாளியான முஹமட் நௌசாத் (வயது 36) என்பவர் இன்று காலையில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யுவதியின் மைத்துனர் ஆவார்.
இப்பிரதேசபை எல்லைக்கு உட்பட்ட மல்கம்பிட்டி என்கிற இடத்தில் உள்ள பள்ளாறு என்கிற ஆற்றுக்கு அருகில் இளம்யுவதி ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கடந்த புதன்கிழமை காலை 9.30 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்மாந்துறையைச் சேர்ந்த 23 வயது இளம் யுவதியும்,யுவதியின் ஒன்றரை வயது மகளும் மர்மமான முறையில் காணாமல் போய் விட்டனர் என்று பெற்றோர் மற்றும் உறவினர்களால் இதே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
மீட்கப்பட்ட சடலம் காணாமல் போய் இருந்த பாத்திமா ரஷ்னாவின் உடையதுதான் என்பதை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடையாளம் காட்டினர். இதையடுத்துப் பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டனர்.
அப்போதுதான் யுவதியையும், குழந்தையும் யுவதியின் அக்காவின் கணவரான நௌசாத் அடித்துக் கொன்று இருக்கின்றார் என்று பொலிஸார் கண்டு பிடித்தனர். பொலிஸார் இவரைக் கைது செய்து விசாரித்தபோது இவர் சொந்தத் தேவைக்கு அடகு வைக்க மைத்துனியின் தங்க நகை ஒன்றை இரவல் பெற்றிருக்கின்றார் என்றும் நகையை மீட்டுத் தரச் சொல்லி மைத்துனி நச்சரிக்கத் தொடங்கியமையை அடுத்தே இருவரையும் அடித்துக் கொன்று விட்டார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மைத்துனியின் சடலத்தை பள்ளாறு ஆற்றுக்கு அருகில் வீசிய பகுதியிலேயே மைத்துனியின் குழந்தை உடைய சடலத்தைப் புதைத்துள்ளார் என்று கொலையாளி தெரிவித்திருக்கின்றார். இவரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| தாயும்,சேயும் படுகொலை! | 0 |
.gif)
.gif)
0 Responses So Far:
Post a Comment